Friday, November 19, 2010

அன்பே கடவுள்


கடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் இழுக்கப்படுகிறோம். ஒரு பெண் தன் கணவனிடம் அன்பு செலுத்தினால் அவனிடமுள்ள கடவுளாகிய மகத்தான இழுப்பாற்றலே அவளை அன்பு செலுத்தத் தூண்டுகிறது. நாம் வழிபட வேண்டியது கடவுளாகிய இந்த அன்பு ஒன்றையே.

நாம் அவரை இந்த உலகைப் படைத்தவராகவும், காப்பவராகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் புறவழிப்பாட்டை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து சென்று, அவரை அன்பின் உருவாகாக் கொண்டு எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணுவதே பக்தி.


அன்பின் வகைகள்

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே.

அன்பில் 12 வகைகள் உண்டு.

1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு.

2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு.

3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.

4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.

5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.

6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.

7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.

8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.

9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.

10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.

11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.

12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகிற அன்பு.

அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம், நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும்.

13 comments:

  1. நீண்ட இடைவெளிக்கு ஹீலிங் பகுதியில் பதிவை பார்க்க சந்தோஷமா இருக்கு. சின்ன வயதில படித்த வாசகம் தான் நினைவுக்கு வருது "அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றும் இல்லை"

    இரண்டாவது படத்தில நிறைய ஜெர்மன் மொழி எழுத்துக்கள் இருக்கே. அப்போ ஜெர்மன்/சமஸ்கிருதம் எல்லாமே ஒரே மொழியில் ( Same Lingustic root) இருந்து வந்த கிளைகளாயிருக்குமோ?? படம் சுத்தமா புரியலை ஹைஷ் அங்கிள் !

    ReplyDelete
  2. ஹைஷ் எப்படி இருக்கிங்க? நீண்ட நாள் இடைவெளிக்கு பின் பார்க்கிறேன். லதா மற்றும் பசங்க எல்லாம் எப்படி இருக்கிறார்கள்.

    அன்பை பற்றி நல்ல கருத்தோட இருக்கிறதை படித்தேன். ஒன்று மட்டும் கரெக்ட்ங்க. அன்பை நிலை மாறிச் செலுத்தினால் அன்பு நன்மை தரும் அது ரொம்ப ரொம்ப கரெக்ட்.

    ReplyDelete
  3. அன்பை பாசம், கருணை, நேசம் என்று பல பிரிவுகளாய் பகுத்திருப்பது அருமை! அன்பிலேயே கருணை என்பது மிக உயர்ந்த நிலை!
    எனக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் வரிகள் இப்போது நினைவில் எழுகின்றன.
    “ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்
    அன்பிலழியுமடி-கிளியே!
    அன்பிற்கழிவில்லை காண்!”

    ReplyDelete
  4. அன்பு இலா நீங்க சொன்னதை அப்படியே லதாவிடம் சொல்லிவிடுகிறேன். அவர்தான் டைப் அடித்து அனுப்பினார்.

    இரண்டாவது படத்தின் பதில், மனித இரத்த வகைகளை ABO, + & - , MN பற்றி படித்தால், அதில் தெளிவு கிடைக்கும்.

    ‘’The key to the significance of blood type can be found in the story of human evolution: Type O is the oldest; Type A evolved with the agrarian society; Type B emerged as humans migrated north into colder, harsher territories; and Type AB was a thoroughly modern adaptation, a result of the intermingling of disparate groups.”

    --EAT RIGHT FOR YOUR BLOOD TYPE.

    BY Dr. Peter J. D'Adamo with Catherine Whitney.

    ReplyDelete
  5. அன்பு சகோதரி விஜி நல்வரவு. அனைவரும் நலமே. மிகவும் நன்றி.

    //ஒன்று மட்டும் கரெக்ட்ங்க. அன்பை நிலை மாறிச் செலுத்தினால் அன்பு நன்மை தரும் அது ரொம்ப ரொம்ப கரெக்ட்.// இதில் நிலை மாறாமல் அன்பு செலுத்த வேண்டும்:)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. அன்பு அக்கா தங்களின் நல்வரவுக்கும் பாரதியின் பாட்டை நினைவு படுத்தியதற்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. அன்பில் 12 வகை விளக்கமும் அருமை

    ReplyDelete
  8. அன்பு சகோதரி ஜலீலா பானு தங்களின் நல்வரவுக்கும் ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. ...அவரை அன்பின் உருவாகாக் கொண்டு எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணுவதே பக்தி.//
    //இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். //

    சரியாச் சொன்னீங்க !

    ReplyDelete
  10. அன்பு சகோதரி நிலாமகள் தங்களின் நல்வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. அருமையான வரிகள் ஹைஷ் அண்ணா.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  12. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. //
    அருமையான ஆழ்ந்த அனுபவ வரிகள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்.

    ReplyDelete
  13. ஹாய் ஹைஸ் அண்ணா நல்லாருக்கீங்களா? வீட்ல எல்லாரும் நலம்தானே?
    அன்பு வைக்கறதுலயும் இத்தனை வகை இருக்கா, இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன் எல்லாத்துக்கும் இருக்க வேற்றுமையை... அழகா சொல்லிருக்கீங்க அண்ணா...

    ReplyDelete