Thursday, September 30, 2010

தியானம்


* இரவு பகலாகும் போது உள்ள நேரம் மிகப்பெரிய ஆற்றல் உள்ள நேரம். அந்த நேரங்களில் தான் தியானம் மிகவும் எளிதாகக் கை கூடிகிறது.

* தியானம் ஆழப்படப்பட உறக்கம் ஆழ்ந்து ஏற்படுகிறது.

* முயற்சியுடன் தியானம் செய்ய ஆரம்பித்தால் அந்த முயற்சியே ஆழமாகச் செல்வதைத் தடுத்துவிடும். ஆனால் தியானத்தின் சுவையை உணர்ந்து விட்டால் உறக்கமே தியானத்தின் திசைநோக்கி மெல்ல நகர ஆரம்பித்து விடும்.

* தியானம் மரணத்திற்கு ஒப்பானது. தியானம் ஒரு பக்கம் நம் இருப்பை உணரச்செய்கிறது. மறுபக்கம் நம் ஆணவத்தை கொன்று விடுகிறது.

* தியானம் ஆழமடைந்து விட்டதற்கான அடையாளம் ஆனந்தம். தியானம் ஆழ்ந்து செல்லச் செல்ல மகிழ்ச்சி ஆழமடையும் என்பது தர்க்கரீதியான உண்மை.


தியானத்தின் பயன்கள்

1. மனிதன் தன்னிடத்திலே உண்மையான வலிமையை வல்லமையை தேக்கி வைத்துக் கொள்ள உதவும் சாதனமாகவே தியானம் திகழ்கின்றது.

2.வாழ்க்கையில் ஏற்படுகின்ற தோல்விகளை, குழப்பங்களைச் சக்தியிழக்க செய்து சுலபமாக முன்னேற்றபாதை அமைத்து தருகின்றது தியானம்.

3.வாழ்க்கையில் எந்தத் துறையில் நாம் தொடர்பு கொண்டிருந்தாலும் அந்தத் துறையி ஆழ்ந்த பிடிப்பும், அக்கறையும், முழு மன ஈடுபாடும் கொண்டிருந்தால் படிப்படியான உயர்வினை கொடுப்பது தியானம்.
ஆதலினால் தியானிப்போம்.

12 comments:

  1. நல்ல பதிவு லதா ஆன்டி!

    ReplyDelete
  2. அன்பு இலாவுக்கு,
    மிகவும் நன்றி.))

    ReplyDelete
  3. லதா அக்காவிற்க்கு......

    தியானம் முறைப்படி மட்டும் தான் கத்துக்கனுமா???

    ReplyDelete
  4. அன்பு சகோதரி லதாவினீத்

    ஆம்.

    நீங்கள் இருக்கு இடத்துக்கு மிக அருகில்தான் வேதாத்திரி மகரிஷியின் அறிவு திருகோவில் உள்ளது அங்குதான் லதா ஆசிரியர் பயிற்சி எடுத்து இருக்கிறார்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. ஹைஸ் அண்ணா... இங்க உடுமலைலயே மகரிஷி யோகா செண்டர் இருக்கு ஆனா என் மகளை விட்டுட்டு போக முடியாத நிலை. ஆனால் கண்டிப்பா போகனும், கத்துக்கனும். சீக்கிரமா கத்துக்கறேன் அண்ணா...

    ReplyDelete
  6. லதாமேடம் ஆழியார்ல இருக்காங்க தானே அண்ணா??? முடிஞ்சா ஒருமுறை அவங்களை நேரா சந்திக்கறேன் அண்ணா.....

    ReplyDelete
  7. அவர்கள் 31 அக்டோபர் இரவு பயிற்சி முடிந்து திரும்ப வந்து விட்டார்கள். ஆனால் மீண்டும் அங்கு பட்டய படிப்புக்கா வருவார்கள்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. அன்பு சகோதரி ஜலீலாபானு ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. அற்புதமான விளக்கம்! படங்கள் தேர்வும் அருமை!

    ReplyDelete
  10. அன்பு சகோதரி நிலாமகள் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. தியானத்தின் பயன்கள் அற்புதம்.

    ReplyDelete