Monday, August 30, 2010

"குரு" வும் "வாழ்க வளமுடன்" வாழ்த்தின் பயனும்

குரு ஒரு வழிகாட்டி.  தவத்தை குரு மூலம்தான் பெற்று பழகுதல் வேண்டும், என்றாலும் குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என எண்ண வேண்டாம்.  அது உங்களுடைய வினையின் பதிவுதான், நீங்கள் செய்த கருமத்தின் மூலமாக, வினையின் பயனாக நல்லதை பெற வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க ஓங்க உங்களது மனதின் ஊடே உள்ள அந்த சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.  அந்த நேரத்திற்கு வருபவரை குரு என கொள்கிறீர்கள்.

”வாழ்க வளமுடன்” 

மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தால் அன்றி வாழ்த்தவே முடியாது, அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும் போது மனதுக்கு ஒரு  வலுவு, ஒரு தெளிவு, அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுறுவி நிறைந்து அந்த உயிர்கலப்பு ஏற்படகூடிய நிலை, இவை எல்லாம் அதிகம் ஆகும்.


அந்த நுண்ணிய நிலையில் நாம் வாழ்த்து கூறும் போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டு பேருடைய அடித்தளமான அந்த உயிர் நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (Interaction) ஏற்படுகின்றது; ஊடுறுவி பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை, நாலுதடவை, செய்ய செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால் அது எப்போழுதும் நமக்கு அலைவீசிக் கொண்டு இருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்பு படி வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கும்; அந்த் தொடர் அறுபடாது இருக்கும். அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டி நினைப்பது, அவர்கள் நன்மைக்கா நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றி விட முடியும்; அவர்களுடைய செயல்களை திருத்தி விடமுடியும்; எண்ணங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி விட முடியும்; நல்லவர்களாக மாற்றி விட முடியும்.


தவம் முடித்ததும் வாழ்த்த வேண்டும்.  தவத்தில் இருக்கும் போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் ”அல்ஃபா அலை” அதிர்வுக்கு வந்து விடுகிறோம், அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்து விடும். அந்த இடத்தோடு அங்கே இருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம்.


வாழ்க வளமுடன்” எனற எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது. அம்பு இருக்கிறது. அடுதது அம்பு எய்வதற்கு ஒரளவு நாணை பின்னுக்கு இழுத்து விடுவது ஒன்று, கடைசி வரைக்கும் நாணை இழுத்து அம்பு விடுவது என்பது வேறு. எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதை கொண்டு வருகிறோமோ அங்கே இருந்து கொடுக்க கூடிய வாழ்த்துக்கோ, அல்லது சாபத்திற்கோ கூட வேகம் அதிகம், செய்லபடும் வேகமும் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த வேகத்தில் நாம் சொல்ல கூடிய சொல்லுக்கு, எண்ணக்கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்;  சீக்கிரமாக செயலுக்கும் வந்து விடும்.  நமக்காக என்னென்ன வேண்டுமோ அதை செயல் படுத்துவதற்கு சில நாட்களானாலும் சரி, பிறகுக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.

10 comments:

 1. ஹைஷ் அண்ணன் முதலாவது படத்தைப் பார்த்ததும், மேலே படிக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன். காரணமில்லாமல் போட்டிருக்க மாட்டீங்கள் விளக்கம் பிளீஸ்ஸ்.

  ReplyDelete
 2. அனைத்து படங்களும் விளக்கமும் நன்று. தியான மண்டபம்.... பாண்டிச்சேரியோ?

  ReplyDelete
 3. //மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தால் அன்றி வாழ்த்தவே முடியாது,
  இங்க டவுட் கேக்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க.. ஒரே ஒரு டவுட்..
  இந்த நிலைக்கு வந்திட்டா வாழ்த்த முடியும் இல்லையா.. அப்படி வந்திட்டு மறுபடியும் வேற மனநிலைக்கு போய் யாரையும் வாழ்த்த முடியாத மன நிலை வர வாய்ப்பு இருக்கா இல்லையா?

  ReplyDelete
 4. அன்பு சகோதரர் ஹைஷ்!

  குரு என்பவர் எப்படி எமக்கு அமைகிறார் என நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள். ஆக நமது வினைப்பயன்களே எமக்கு நல்லகுருவை கிடைக்க வைக்கிறது.

  அடுத்து வாழ்த்து.
  ஒருவரை நாம் முகத்துதிக்காக வாழ்த்துவது கிடையாதுதான்.
  மனதில் ஏற்படும் அந்த நுண்ணிய இயக்கத்தினால்தான் ஒருவரை நாம் வாழ்த்தும்போது நமக்கும் சந்தோஷ உணர்வு உண்டாகிறதா?

  அதனால்தான் ஒத்த உணர்வுடன் உள்ளவர்களின் வார்த்தைகள் வாழ்த்துகள் பலிக்கின்றனவா?

  இன்னும் மனம் தூய்மையாகவும் அமைதியாகவும் இருக்கும் சமயம் எண்ணும் எண்ணங்களுக்கும் சொல் செயலுக்கும் பயன் அதிகம் என நினைக்கிறேன்.

  அருமையான பதிவு.
  எனது நீண்டகால தேடலுக்கு இன்று விடை கிடைதுள்ளது. மிக்க நன்றி.

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 5. 1. அன்பு தங்கை அதிரா நோ கமெண்ட்ஸ்:)

  வாழ்க வளமுடன்

  பி.கு: இந்த வாழ்க வளமுடன் வாழ்த்துக்கு முற்று புள்ளி வைப்பது இல்லை அதுவும் ஒரு மபொர.

  ReplyDelete
 6. 2. இந்த தியான மண்டபம் ஆழியாரின் உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் வருங்கால வேதாத்திரி மகரிஷி பல்கலைகழகத்தினுடையது.

  புதுச்சேரி தியான மண்டபமும் இப்படித்தான் இருக்கும்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 7. அன்பு இலா இங்கு சந்தேகம கேட்க கூடாது என்று சொன்னதற்கு காரணம் இது என் அராட்டிக் யோகாவின் அசைன்மெண்ட், இங்கு என் கைடுக்கும், சக யோகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்.

  தற்சமயம் அவர் வேறு நாட்டுக்கு சென்று இருப்பதால் அவரிடம் அனுமதி பெற்று தமிழில் எழுதுகிறேன். இது அவர் வரும் வரைதான்.

  முன்பு அறு சுவையில் எழுதி இருக்கிறேன் மன் அலையதிர்வுகள் பற்றி. அதில்

  0-4: டெல்டா இறைநிலை அல்லது சமாதி
  5-8: தீட்டா சித்தர்கள், ஞானிகள்
  9-12: அல்ஃபா தியான நிலை மிக உன்னத கவனிப்பு நிலை
  13-20: பீட்டா -1 விழிப்பு நிலை (இயல்பான மனநிலை)
  21->40: பீட்டா-2 உணர்ச்சி வயப்பட நிலை உயிராற்றல் இறைந்து வீணாகும் நிலை

  இதில் நுண்ணிய மனநிலை என்பது ஒரு பொருள் அல்ல அது ஒரு உயிர் என்ற பரமாணுவின் தற்சுழற்சியால், சுத்தவெளியுடன் உரசும் உரசலால் ஏற்படும் ஒரு அலை இயக்கம்.

  It is dynamic in nature the spinning speed of the "paramanu" can varies randomly at any instance. So the mind is not study (i.e why its called Monkey)

  You can shift you mind in fraction of second in any wave length.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 8. அன்பு சகோதரி முதல் பதில்:
  //அந்த நுண்ணிய நிலையில் நாம் வாழ்த்து கூறும் போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டு பேருடைய அடித்தளமான அந்த உயிர் நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (Interaction) ஏற்படுகின்றது; ஊடுறுவி பாய்ந்து நிற்கின்றோம்.// இந்த பரஸ்பர உயிர் கலப்புதான் மகிழ்ச்சிக்கு காரணம்.

  இரண்டாம் பதில்:

  //அதனால்தான் ஒத்த உணர்வுடன் உள்ளவர்களின் வார்த்தைகள் வாழ்த்துகள் பலிக்கின்றனவா?//

  அப்போது கௌதமபுத்தர் அல்லது மகா வீரார் ஒரு திருடனை வாழ்த்தினால் பலிக்காதா? கண்டிப்பாக பலிக்கும்:)

  //இன்னும் மனம் தூய்மையாகவும் அமைதியாகவும் இருக்கும் சமயம் எண்ணும் எண்ணங்களுக்கும் சொல் செயலுக்கும் பயன் அதிகம் என நினைக்கிறேன். //

  இதைதானே அங்கிருந்து இங்கு வரை --அன்றிலிருந்து இன்று வரை சொல்லிக்கொண்டு வருகிறேன்:)

  வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  ReplyDelete
 9. நல்ல விளக்கங்கள் .பகைவனை சாபத்தால் வெறுப்பதை விடுத்து அவனால் என்னுடைய பழைய வினைப்பதிகவுகள் ( பாவ மூட்டைகள்) கழிகிறது என மனம் திருந்தி வாழ்த்துவது நல்ல பண்புதான்..வேதாத்திரி மகரிசியின் sky யோகப பயிற்சி பளுள்ளங்களைத் திருத்தியுள்ளது..வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 10. நல்ல விளக்கங்கள் .பகைவனை சாபத்தால் வெறுப்பதை விடுத்து அவனால் என்னுடைய பழைய வினைப்பதிகவுகள் ( பாவ மூட்டைகள்) கழிகிறது என மனம் திருந்தி வாழ்த்துவது நல்ல பண்புதான்..வேதாத்திரி மகரிசியின் sky (மன வளக்கலை)யோகப பயிற்சி பல
  உள்ளங்களைத் திருத்தியுள்ளது..வாழ்க வளமுடன்.

  ReplyDelete