Wednesday, June 23, 2010

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -2




விஞ்ஞானம் எவ்வாறு மூன்று வகையாகப் பகுத்து பார்க்கப்பட்டதோ அவ்வாறே மெய்ஞ்ஞானமும் மூன்று வகையாக்ப் பகுத்துப் பார்க்கபடுகிறது. அவை உடம்பு, உயிர், மனம் என்பனவாகும்.

உடம்பு எதனால் இயங்குகிறது? இந்த உடம்புக்கு நோய், நொடிகள் எவ்வாறு வருகின்றன? வந்தபின் மருந்து என்ற ஒன்றை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, நோய் நொடிகளே வாராமல் தடுத்துக் கொள்ள என்ன வழி? இந்த உடம்புக்கு இளமையும் முதுமையும் எதனால் வருகின்றன? இவற்றையெல்லாம் ஆய்ந்து அறிவது உடம்பைப் பற்றிய அறிவு.

உயிர் என்பது என்ன? இது மனித உடம்பில் எங்கே இருக்கிறது? மனிதனின் சகலமான இயக்கங்களுக்கும் இதுதான் ஜீவன் என்ற ஆதாரமா? உயிர் போனபின் உடல் அழிந்து போகிறது. உயிர் என்ன ஆகிறது? உயிரின் நிலை மரணத்திற்குப் பின்னால் என்ன? மரணம் என்பது மானுடனின் சகலமான இயக்கங்களுக்கும் ஒரு இறுதி முடிவா? இந்த மரணத்தை மனிதன் வென்று விட முடியாதா? முடியுமானால் அதற்கு என்ன வழி? முடியாது என்றால் மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்வு இருக்கிறதா? இவைகளைப் பற்றி ஆய்ந்த அறிவு உயிரைப் பற்றிய அறிவாக ஆயிற்று. இந்த அறிவே ஆன்மாவின் துலக்கமாயிற்று.

மனம் என்பது என்ன? இது எங்கே இருக்கிறது? இது ஏன் ஒரு நொடி கூட சும்மா இராமல் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது? இப்படி அலைகின்ற மனதைக் கொஞ்ச நேரமாவது சிந்தனைகளே இல்லாதபடி சும்மா வைத்திருக்க முடியாதா? அப்படிச் சிந்தனைகளே இல்லாதபடி மனதை அசைவற்ற நிலைக்கு கொண்டு செல்வதால் மனிதன் பெறுகின்ற பயன் என்ன? இப்படி மனதை ஆய்ந்து அறிகின்ற அறிவே மனதைப் பற்றிய அறிவு.

இப்படி மூவகைப் பகுப்புகளின் கீழே விவரிக்கப்படும் விஞ்ஞானத்திற்கும், மெய்ஞ்ஞானத்திற்கும் குறிப்பிடும்படியான ஒற்றுமைகள் ஏதும் இல்லை. ஆனால் விஞ்ஞானமும், மெய்ஞானமும் நிரம்ப வேறுபாடுகள் கொண்டது.

விஞ்ஞானம் தனது சோதனைக் கூடத்துக்குள் சிக்குகின்ற பொருட்களை மட்டும் ஆய்வு செய்ய முடியும்.

மெய்ஞ்ஞானம்; கண்ணால் பார்க்கமுடியாத, கைகளால் தீண்டமுடியாத எந்த சூட்சமத்தையும் ஆய்வு செய்ய வல்லது.

விஞ்ஞானதிற்கு சோதனைகான புறக்கருவிகள் தேவை.

மெய்ஞானத்திற்கு கருவிகள் ஏதும் வேண்டாம். அக கருவியான மனமே அதன் கருவி.

விஞ்ஞானத்தின் கோட்பாடுகள், முடிவுகள்,  விஞ்ஞானிக்கு விஞ்ஞானி, நாட்டுக்கு நாடு, காலத்திற்கு காலம் மாறகூடியவை.

மெய்ஞ்ஞானத்தின் கோட்பாடுகளும், முடிவுகளும் அன்றும், இன்றும் இனி என்றும் நிலையானவை. மாற்ற முடியாதவை.


முற்பகுதி
--- தொடரும்

6 comments:

  1. மெய்ஞானத்திற்கு கருவிகள் ஏதும் வேண்டாம். அக கருவியான மனமே அதன் கருவி.//ஆணித்தரமான கருத்து.

    நல்ல அருமையாக விளக்கி,உங்க பாணியில்
    நல்லதொரு தொடர் ஆரம்பித்திருக்கீங்க.தொடர்ந்து எழுதுங்கள்அண்ணா. நன்றி.

    ReplyDelete
  2. மிக நல்ல விளக்கங்கள். வாசிக்கும்போதே மனதில் பதிந்துவிடுகிறது.

    *விஞ்ஞானம் மாறிக்கொண்டே போகிறது. *மெஞ்ஞானம் மாற்றமில்லாதது, நிலையானது.

    ஹைஷ் அண்ணன், நீங்கள் ஒரு பேராசிரியராகச் சேர்ந்துகொள்ளுங்கோ.


    “அவரை”மட்டுமே படம் போட்டிருக்கிறீங்கள், அவர் மிக பாசமாக வளர்த்தாராமே ஒரு பூனை, அதைச் சேர்த்துப்போடவில்லை நீங்கள்:(, நான் ஐன்ஸ்ரைனைச் சொன்னேன்.

    ReplyDelete
  3. அன்பு சகோதரி அம்முலு வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. பூனைதான் முருங்கையில் இருக்கே!

    ReplyDelete
  5. இன்னிக்குத்தான் உங்கப்ளாக்குக்குவந்தேன். படிக்க நிரைய உபயோகமான விஷயங்களைக்கொடுத்து வருகிரீகள். நன்றி

    ReplyDelete
  6. அன்பு சகோதரி கோமு தங்களின் நல்வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete