Thursday, June 24, 2010

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -3


மனிதன் என்பவன் உடம்பு, உயிர், மனம் இவை மூன்றின் ஒருமித்த தொடர்பினால், இருப்பினால்; இருப்பவன், இயங்குபவன் என்பதில், இந்த இரண்டு வகையான ஞானங்களுக்கும் கருத்துவேற்றுமை இருப்பதற்கில்லை. உடம்பு, உயிர், மனம் இவை மூன்றையும் பாதுகாக்கவே இந்த இரண்டு வகையான ஞானங்களும் ஒருமைப்படுகின்றன. என்றாலும்; உடம்பு, உயிர், மனம் ஆகிய மூன்றின்னோடு விஞ்ஞானம் தனது சிந்தனைகளை நிறுத்திக் கொள்ளுகிறது. இவை மூன்றினோடும், இவற்றுக்கு அப்பால் ஆன்மாவையும் சேர்த்து மெய்ஞ்ஞானம் சிந்திக்கிறது.

இந்த சிந்தனைச் செயல்பாடுகளின் பேரில் நமது ஞானிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நேர்ந்த அனுபவங்களும், முடிவுகளும் அவர்களுது இச்சைப்படி இல்லாமல் எதுவோ ஒரு ஆணையின் படியே நேர்ந்தது; நிறைவையோ, குறைவையோ அல்லது அவர்களின் வாழ்நாளின் முடிவையோ விளைவித்து இருப்பதை நாம் ஒப்பு கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பிறப்பாலும், இறப்பாலும், உடம்பாலும், உயிராலும் ஒரே வகையான அடிப்படை நியதிகளுக்கு உட்பட்டு இருக்கின்ற மனிதன் மனத்தால் ஏன் மாசுபட்டு போனான்? மனித ஜாதி எனபது ஒன்றே என்பதை அவன் தனது அறிவால் ஸ்தாபிதம் செய்யக்கூடாதா?


பிரபஞ்சத்தின் தூய்மையை கெடுத்து அறிவியல் புதுமையை கண்டறிய துடிக்கும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் அற்புதங்கள் என்ற பெயரால் மாய்மாலங்கள் செய்து மனிதனை மனிதன் மோசம் செய்து சுயலாபமும், விளம்பரமும் தேடிச் கொள்ளும் போலி ஆன்மீகத்தைக் காட்டிலும்; இன்றய மனிதனின் தேவை உயர்ந்த எண்ணங்கள் தாம். இவற்றின் பேரிலான நிம்மதிதான். இந்த மனிதநிம்மதி ஒரு நிலையான நிம்மதியாக இருக்க வேண்டுமானால் அது மனதின் நிம்மதியால் வருகின்ற நிம்மதியாகவே இருக்க முடியும்.

உடம்பாலும், உயிர் என்ற சக்தியாலும் நிம்மதியை பெற்றுக் கொண்டால், மனத்தால் நிம்மதியை மனிதன் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கான ஒரு பாதைதான் “மெய்யறிவு அல்லது மெய்ஞானம் அல்லது பிரம்மஞானம்”. இதுவே ஆணிவேராகிய “ஆரோக்கியம்” மனத்தின் நிம்மதியான மனித நிம்மதி.

பகுதி-2 படிக்க
தொடர் முற்றும்.

4 comments:

  1. இந்த மனிதநிம்மதி ஒரு நிலையான நிம்மதியாக இருக்க வேண்டுமானால் அது மனிதின் நிம்மதியால் வருகின்ற நிம்மதியாகவே இருக்க முடியும்.///உண்மைதான், மனம் நிம்மதியாக இருப்பின் உடம்பு லேசானதுபோல இருக்கும், மனதில் சந்தோசம் பொங்கும், நல்ல பதிவு ஹைஷ் அண்ணன்.

    மேலே இருக்கும் மனிதத்தொடர், நானும் படித்திருக்கிறேன், வருங்காலமனிதர்கள், கத்தரிக்காய்க்குக்கூட, தடி கட்டியே பிடுங்குவார்களாம் என(குட்டி:) மனிதர்கள்), ஆனால் அந்தக்காலத்தையெல்லாம் நான் நினைப்பதில்லை, நினைத்தால் நிம்மதி போய்விடும்ம்ம்ம்ம்.

    இன்று பதிவு அனுப்பும்போது எரர் வந்து வந்து, குழப்பிவிட்டது.

    ReplyDelete
  2. கோல்டன் ரூல் அருமை! கடைசி பத்திரொம்ப அருமை.... இப்படியான மினி தொடர்களை தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. அன்பு தங்கை அதிரா வரவுக்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. அன்பு இலா நேரம் கிடைத்தால் கண்டிப்பாக எழுதுகிறேன். மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete