Sunday, November 28, 2010
அறுசுவை
சுவைகளில் ஆறுவகை சொல்லப்படுகின்றன. அவை துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாகும். சுவை என்பது ஒன்றே. எனினும் உடலில் காந்த சக்தி சுவையாக மாறி எழுச்சி பெற்று இயங்கும்போது, அதனுடைய செலவாகும் அளவையும், பரிணாமத்தையும் பொறுத்து அதை ஆறு பிரிவுகளாக பகுத்துக் காண்கிறோம்.
முதலில், ஒர் அணுவில் ஐந்து மாத்திரை அளவான காந்த சக்தி சுவையாக எழுச்சி பெற்று இயங்குகின்றது எனக் கொள்வோம். அது முதன் முதலில் துவர்ப்பு என்னும் நிலையில் இருக்கிறது. அதுவும் ஒன்று முதல் ஐந்து வரை சுவையாகச் செலவாகும் சக்தியின் அளவுக்கேற்ப துவர்ப்பு சுவையிலேயே, அளவில் பல வித்தியாசம் உண்டாகிறது.
அதற்கு மேல் ஆறு முதல் பத்து மாத்திரை வரையில் காந்த சக்தி சுவையாக எழுச்சி பெற்றால், அது கைப்பு என்னும் சுவையாக மாறுகின்றது. இவ்விதம் ஐந்தைந்து மாத்திரை அளவு சக்தி அதிகமாக செயல்பட, அது மேலும் முறையே கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாக எழுச்சி பெறுகின்றன. ஆகவே ஆறு சுவைகள் என்பது காந்த சக்தியின் ஏற்றத்தாழ்வு நிலைகளே அன்றி ஒவ்வொன்றும் தனித் தனியானது அல்ல.
உடலில் உடல் அமைப்பில் ஆறு சுவையும் இருக்கின்றன. கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆறு சுவையும் இருக்கின்றன. உடலின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சுவை அதிகமாக இருக்கலாம். தேள் கொட்டினால் தேளின் விஷமாகிய ரசாயனம் உடல் முழுவது கைப்புச் சுவையாக அதிகரித்து விடுகிறது. அதனால் உடலின் அணு அடுக்கில் குழப்பம் மிகுதிப்பட்டு உடலுக்கும் உயிருக்கும் பொருந்தாமை ஏற்பட்டு விடுகிறது. அதே போல் பாம்புக் கடியினால் உடலில் கார்ப்பு சுவை அதிகரித்து விடுகிறது.
சுவையின் அளவு அதிகரிக்குங்கால், ஒன்று மற்றொன்றாகவும் அதில் முன்னிலையும் பின்னிலைக்குரிய மௌன எழுச்சியும் அடக்கம் பெற்றே இருக்கிறது. ஆகவே எந்த ஒரு சுவையிலும் ஆறுவைக அடங்கியும், அவற்றில் அதிகமாக மீறி நிற்பதே புலனுணர்ச்சிக்கு உணர்வாகவும் இருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
அறுசுவை விளக்கங்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப அருமையான் விளக்கம்
ReplyDeleteஅன்பு சகோதரி கோமு தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
அன்பு சகோதரி ஜலீலாபானு தங்களின் அன்பான பாரட்டுகளுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
மிக அருமையான, உபயோகமானதகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅன்பு அம்மா தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நல்ல விளக்கம்.
ReplyDeleteஹைஸ்ஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்தின்ருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநலமா?
மறந்துட்டிங்களா விஜிஸ் கிச்சன்* கிரியேஷன்ஸை.
www.vijisvegkitchen.blogspot.com
www.vijiscreation.blogspot.com
அன்பு சகோதரி ஆசியா உமர் மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
அன்பு சகோதரி விஜி மறக்க வில்லை நேர குறைவு மட்டுமே காரணம். மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்