மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் எற்பட்ட பதிவுகளின் மூலம் செயல் படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல் அனத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதனும் தன்க்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும் பெற்று இருக்கின்றான். ஆகவே மனதின் நிலைமைக்கேற்ப அவனிடம் இருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடு உடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனை பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடம் இருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையை பொறுத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேருன்ற செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாக பதிந்து நம் குணங்களை தீய பதிவுகள் கட்டு படுத்துமாறு ஆகிவிடுகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.
பி.கு: இது லதா படிக்கும் முதுகலை பட்டய படிப்பு “யோகாவும், மனித மாண்பும்” என்ற புத்தகத்தில் இருந்து தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :))) கீழே இருக்கும் படத்திற்கும் பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))
நல்ல கருத்துள்ள பதிவு !
ReplyDelete//நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும் //
ஒருவரை மனதால் வசையும் போது சே அவன் நல்லா இருக்கட்டும் என்று சொல்வதன் மூலம் அந்த தீய எண்ண அலைவரிசையை மாற்றுகிறோமா??
லதா ஆன்டி! நல்ல கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்வதற்க்கு நன்றி!
ஹைஷ் அங்கிள்! நீங்க இப்படில்லாம் "படம்" போடுவீங்கன்னு தெரிஞ்சா என்ன ஆறது??!! எதுக்கு தலைய சுவரில் முட்டிக்கிறீங்க ??!!
பாராட்டாம இருக்க முடிவதில்லை.. உங்க ஜெனெரேஷனில( எங்க ஜெனெரேஷன் இதுல திருந்திடுச்சு :)) மனைவியின் திறமையை ஊக்குவிப்பவர்கள் ரொம்ப கம்மி... லதா ஆன்டிக்கு ஊக்கம் அளித்து அவங்க திறமை மிளிர செய்கிறீர்கள்... ரொம்ப நல்ல விஷயம்...
அன்பு சகோதரர் ஹைஷ்!
ReplyDeleteஎமது எண்ணங்கள்தானே தொடரும் சொல் செயலுக்கு அடிப்படை.
ஆகவே நாம் எண்ணங்களை சீர்படுத்தினால் அடுத்தவை இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் அதாவது நல் ஒழுங்குக்கு வந்திடுமல்லவா?
ஆகவே எண்ணங்களை சீரமைக்க பயிற்சி எடுக்கச் சொல்லபோறீங்கள். அப்படித்தானே.......
//தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது //
என்று சொல்லிவிட்டு எதற்காக சுவரில் தலையை மோதும் படம் போட்டுள்ளீர்கள்?
1) ஐயோ இதைத்தானே முன்பு ஒரு தடவை சொல்லிவிட்டேனே மறுபடியும் எதற்கு எழுதணும்......... என்பதாலா?
அல்லது
2) எத்தனை தடவை எழுதினாலும் ஒண்ணும் விழங்கப்போறதில்லை. என்று நொந்து நூலாகி.... அதனாலா:)
வாழ்க வளமுடன்!
நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்/// உண்மைதான் ஹைஷ் அண்ணன், எமக்குத் தேவையான பதிவாகத்தான் போட்டிருக்கிறீங்க...
ReplyDeleteஎதுக்கு அந்தக்காவையும், லோட் ஒஃப் த ரிங்ஸ் ல வருபவர்போல தம்பியையும்..... சூலத்தோட போட்டிருக்கிறீங்க என்றுதான் புரியவிலலை:))), பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஉ:).
லதா அக்காதான் இதுக்குத் தூண்டுகோலோ? மிக்க மகிழ்ச்சி. இதைத்தான் சொல்வது, எமக்கு எது கிடைக்கவேண்டுமோ, அது ஏதோ ஒரு வழியில கிடைக்குமென்று.... நீங்க சொல்லாவிட்டாலும், லதா அக்காவினால், தமிழ்ப் பதிவு போடுறீங்களே.. அதைத்தான் சொல்கிறேன்.
தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :))) கீழே இருக்கும் படத்திற்கும் பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))
ReplyDelete/// இப்ப புரிஞ்சுபோச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ:))))
///
பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))/// ஆமாஇல்ல....ஆமாஇல்ல...ஆமாஇல்ல:))))
//ஒருவரை மனதால் வசையும் போது சே அவன் நல்லா இருக்கட்டும் என்று சொல்வதன் மூலம் அந்த தீய எண்ண அலைவரிசையை மாற்றுகிறோமா??//
ReplyDeleteஇலா முன்பு சொன்ன வைகரி(1), உபாம்ஸூ(10), மானஸீக்(100) நினைவு இருக்கிறதா? உதட்டளவில் ஒரு யூனிட் பவர், தொண்டை 10 யூனிட் பவர், மனம் 100 யூனிட் பவர்
இனி நீஙகளே முடிவெடுக்க வேண்டும் “எங்கிருந்து அவன் நல்லா இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள்”
கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
//எமது எண்ணங்கள்தானே தொடரும் சொல் செயலுக்கு அடிப்படை.
ReplyDeleteஆகவே நாம் எண்ணங்களை சீர்படுத்தினால் அடுத்தவை இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் அதாவது நல் ஒழுங்குக்கு வந்திடுமல்லவா?//
அன்பு சகோதரி இளமதி (மபொர) இந்த எண்ணங்கள் நமதே அல்ல அவை ஆற்றில் அடித்து செல்லும் சறுகுகள் போல், காற்றில் பறக்கும் தூசிகள் போல்தான். நமது மன அலையதிர்வினால் அதற்கொப்ப மிதக்கும் எண்ணங்கள் ஈர்க்க படுகின்றன. அதனால் நமது உயிராற்றலின் சுழற்சி வேகத்தை முறைப்படுத்தினால் நமது மனம் சரியான எண்ணங்களை ஈர்க்கும்.
3. All the above தான் சரியான விடை :)
வாழ்க வளமுடன்
//எதுக்கு அந்தக்காவையும், லோட் ஒஃப் த ரிங்ஸ் ல வருபவர்போல தம்பியையும்..... சூலத்தோட போட்டிருக்கிறீங்க என்றுதான் புரியவிலலை:))), பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஉ:).// தீய எண்ணங்களை கொண்டு இருப்பவர்களை அந்த சூலத்தால குத்த சொல்லி இருக்கிறேன்:))))))
ReplyDeleteவாழ்க வளமுடன்
சரியா புரிஞ்சா சரிதான்
ReplyDeleteபி.கு: க்குதான் சம்பந்தம் இல்லை என சொன்னேன்:)))
Oh ! I get it . But I am working on it. Actually a team of unconnected people are helpig me get a perspective. It really comes from mouth/throat not really from mind. my my still thinks of the bad he/she did/does
ReplyDelete