Tuesday, August 31, 2010

ஐந்து அளவு முறை


உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலே சாப்பிட்டு கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப்போக்கு என்றாகும். மருத்துவரிடம் போனால், நோய்க்கு மருந்து கொடுப்பார். குணமான மறுதினமே மீண்டும் அளவுக்கு அதிகமான உணவை நாடி போனால், வாழ் நாள் முழுவதும் மருத்துவர் - மருந்து - வயிற்று போக்கு என்ற நிலை எற்பட்டால் வாழ்கை என்ன ஆகும்?  வேறு எந்த காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளவும். அதே போல் எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுப்பட்டால் உடல் வலுவிழந்து போகிறது: உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வும் சீர்ரழிகிறது.  நாம் கெடுகிறோம், குடும்பம் பாதிக்க படுகிறது, சமுதாயமும் தப்புவதில்லை.

ஐயுணர்வோடு, மெய்யுணர்வு இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறது என்றால், உறவிலேயே ஒரு தெளிவு. அதாவது Detachment  in attachment வருகிறது. இதுதான் உறவிலே துறவு நிலை.  இது அல்லாது துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு போவது தான் துறவு என்றால் இறப்பவர்கள்தான் துறவு நிலைக்கு போகிறார்கள் என்று சொல்லாம்! நாம் வாழும் போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமைய வேண்டுமே தவிற, நாம் இறந்த பிறகு துறவானால், மேன்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலும் எல்லை கட்டி கொள்ள வேண்டும்: 1. உணவு 2. உழைப்பு 3. உறக்கம் 4. உடலுறவு 5. எண்ணம் இவை அனைத்திலும் அளவு இட்டு எல்லையை நிர்ணையித்துக் கொள்ள வேண்டும்.

பி.கு: இது லதா படிக்கும் முதுகலை பட்டய படிப்பு “யோகாவும், மனித மாண்பும்” என்ற புத்தகத்தில் இருந்து தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :)))

5 comments:

  1. ரொம்ப அருமையான கருத்து!
    இதனை பகிர்ந்து கொண்ட லதா ஆன்டிக்கு நன்றி!
    டைப் செய்த ஹைஷ் அங்கிளுக்கு ஒரு ஓ போடுங்க!

    ReplyDelete
  2. சகோதரர் ஹைஷ்!
    நல்ல பல விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக தந்துகொண்டிருக்கிறீங்கள். மிக்க நன்றி.

    உணர்வுக்கட்டுப்பாட்டிற்காக கூறப்பட்டிருக்கும் சாப்பாட்டுக்கட்டுப்பாடு சிறந்த நல்ல உதாரணம்.

    உடல், மனம், வாழ்வு, குடும்பம், சமுதாயம் என்று ஒன்று பாதிக்கப்பட்டால் தொடரும் மற்றவைகளும்.......

    எல்லாவற்றிற்கும் அளவுமுறை, கட்டுப்பாடு அவசியம்தான்.

    எமக்காக தனது நேரத்தையும் ஒதுக்கி பங்களித்துக்கொண்ட சகோதரி லதவுக்கும் எமது நன்றிகளை கூறிவிடுங்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. இலா இனிமேல் இதே தொல்லைதான், அடுத்த விடுமுறைக்கு அவருக்கு என தனி பூ வைச்சுட வேண்டியதுதான் (காதுல இல்ல)

    மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. அன்பு சகோதரி இளமதி, தங்களின் அன்புக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. Detachment in attachment வருகிறது. இதுதான் உறவிலே துறவு நிலை. இது அல்லாது துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. //
    அற்புத விளக்கம்.

    ReplyDelete