கை கால்களைத் தவிர்த்துள்ள நம் உடம்பை மூன்றாகப் பிரித்துப் பார்த்தால் தொப்புளுக்குக் கீழே கீழ்ப்பகுதி காமம், குரோதம், ஆசை, சந்தோசம், வலி, வேதனை முதலியவற்றுக்குச் சொந்தமான பகுதியாகக் கருதப்படுகிறது. எவருக்கெல்லாம் இதில் வரம்பு மீறிய ஆர்வமும் தொடர்பும் உண்டோ அவர்களைக் கீழ்மக்கள் எனக்கருதலாம்.
தொப்புளுக்கு மேலே தொண்டைப் பகுதி வரை நடுப்பகுதி. இங்குள்ள உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து சேர்ந்து செயல்படும் தன்மை கொண்டவை. நேர்மை, உண்மை, இரக்கம், திருப்தி முதலியவற்றுக்ச் சொந்தமான பகுதி. இக்குணங்களைப் பெற்றவர்கள் நடுத்தரமக்கள்.
தலைப் பகுதியை அன்பு, அறிவு, நிதானம், தவம், அமைதி, ஆனந்தம், பரமானந்தம் உள்ளிட்டனவற்றிற்க்குச் சொந்தமான பகுதியாகக் கருதலாம். யார் இவற்றில் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் மேன்மக்கள் என்று கருதலாம்.
No comments:
Post a Comment