”தியானம்” என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் “அகத்தவம்” ஆகும். உயிர் மீது மனதைச் செலுத்தி அமைதி நிலைக்கு வந்து அவ்வமைதியின் மூலம் சிந்தனையைச் சிறப்பித்து அறிவை வளப்படுத்தி வாழ்வில் நலம்காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சி தான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாத்தேவையாகும். இதனை மாணவ பருவத்திலேயே தொடங்குவது சாலச் சிறந்தது. பிரபஞ்சம் எனும் பேரியக்க மண்டலத்தைக் களமாகக் கொண்டு உடல்,உயிர்,அறிவு என்ற மூன்றும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு சிறப்பியக்க நிலையமே மனிதன். கருவமைப்பின் மூலம் வந்த முன்வினைப் பதிவுகளையும் அவற்றால் ஊக்குவிக்க்கப்பட்டு தற்போது நிகழும் பிறவியில் ஆற்றியுள்ள வினைப்பதிவுகளையும் அடக்கமாகப் பெற்று அவற்றின் வெளிப்பாடாகச் செயலாற்றி விளைவுகளைத் துய்த்து வாழும் உருவமே மனிதன்.
உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா ஊயிர்களிலும் சிறந்த, மேலான ஒரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக்காட்டும்,பிரதிப்பலிக்கும் கண்ணாடி மனிதனே.-------------அருள்தந்தை
~~~~~~~~~~~~~~
தவம்
~~~~~~~~~~~~~~
த : தத்துவம். நான் யார்? என்ற தத்துவத்தை உணர்தல்.
வ : வடிவம். தன்னை யாரென்று உணர்ந்தபிறகு அதுவாகவே வடிவம் எடுக்க வேண்டும். இறைவனை அரூபமாக உணர்ந்தபின், தானும் அதுவே என உணர்தல். கண்டத்திற்கு மேல் கருத்தைச் செலுத்தும்போது, அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என உணர்ந்து அதுவாகவே வடிவமெடுத்தல்.
ம் : பிரணவ ஒலி. எங்கும் எப்போதும் பிரணவமாகத் தோமற்றமளிக்கிறது.
யோகாவைப் பற்றி இதற்கு முன் பதிவிலும் தொடர்ந்து யோகப்பயிற்சியின் எட்டுவகையில் ஒரு அங்கமான தியானம் = அகத்தவம் என்பதனைப்பற்றியும் சுருக்கமாக அழகாகத்தந்துள்ளீர்கள்.
ReplyDeleteஉண்மையில் இப்பொழுதுதான் அகத்தவம் என்றால் தியானம்தான் என்பதை உங்கள் மூலம் அறிகிறேன். மிக்க நன்றி.
இவை பற்றி மேலும் தாருங்கள் அறிய ஆவலாக உள்ளேன்.
இன்னும் இவ் உளப்பயிற்சியான அகத்தவத்தை முறையாக பயிலவும் மிகுந்த விருப்பம் உள்ளது. காலம்தான் கைகொடுக்கவேண்டும்.
வாழ்க வளமுடன்!
சகோதரி இளமதி அவர்களுக்கு,
ReplyDeleteஇவைப் பற்றி உங்களுக்கெல்லாம் கொடுக்கமுடிந்தது
என்று மிகவும் சந்தோஷம் அடைகிறேன். என் குருவுக்கும், என் கணவருக்கும் நன்றி. நீங்கள் அகத்தவம் பற்றி பயில வேண்டும் என்று எண்ணத்தை
போட்டாலே உங்கள் விருப்பம் நிறைவேற எல்லாம்
வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
ReplyDeleteதன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
குருவை நேரில் சந்தியுங்கள்,
உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
இருக்கும் கர்ம வினைகளை தவம் செய்து அழியுங்கள்.
மேலும் அறிய இங்கே சொடுக்கவும்