Tuesday, September 28, 2010
கொடுங்கள் --> கொடுக்கப்படும்
“அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைக்கவில்லை?” என்று நீங்கள் கருதினால்,குறைந்தபட்சம் உங்கள் உடல் உழைப்பையாவது அடுத்தவர்களுக்கு தானாமாக கொடுங்கள்.
ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிக்கொண்டு போகிறோம். யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில் தான் நாம் வசதியாக வாழ்கிறோம். யாரோ நெய்த ஆடைகளைத்தான் நாம் கம்பீரமாக அணிந்து கொள்கிறோம். யாரோ விளைவித்த தானியங்களைத்தான் சாப்பிடுகிறோம். சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் யாரோ செய்ததுதான்.
சமுதாயத்திலிருந்து இத்தனை விஷயஙளைப் பெற்றுக் கொள்ளும் நாம், சமுதாயத்துக்குப்பட்டிருக்கும் கடன்களை எப்படித் திருப்பி அடைக்கப் போகிறோம்? அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடுத்தவர்களுக்குத் தாராளமாக உதவி செய்யுங்கள். நீங்கள் அடுத்தவருக்கு உதவி செய்தால், ஆண்டவண் உங்களுக்கு உதவி செய்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் ஏன் பிறந்தேன்
ReplyDeleteநாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா.........
இப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
சமுதாயத்திற்கு நாமென்ன செய்தோம்?
ஒவ்வொருவரும் தன்னைதானே கேட்க வேண்டிய கேள்வி.
அன்பு இலாவுக்கு,
ReplyDelete:))))))
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
அன்பு சகோதரி இளமதி அவர்களுக்கு,
ReplyDeleteநல்ல பாடல் நினைவுக்கு வந்துள்ளது. நமது உடலைப் பாதுகாத்து வைத்துக் கொண்டாலே நாம் சமுதாயத்துக்கு செய்யும் தொண்டு ஆகும்.
வாழ்க வளமுடன்