Tuesday, June 22, 2010

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம்
பேதமது ஆகிப் புணரும் பராபரை

என்று திருமந்திரம் சொல்கிறது.

வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்

என்று இந்த வெட்ட வெளியாகிய பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார்.

உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட வர்கம் பெருகி, மனிதன் சிந்திக்க கற்றுகொண்ட காலம் முதலாக மனித அறிவு வளர்ந்து வந்து இருக்கிறது. இந்த அறிவின் வளர்ச்சி காரணமாகவே; இன்றய அறிவியல் புதுமைகளும், கலைப்புதுமைகளும், இலக்கிய இலக்கணங்களும் வளர்ந்து நின்று மானுட வாழ்வை மிளிரச் செய்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்துக்கும் அடிப்படை மனிதன் பெற்றுக் கொண்ட அறிவின் முதிர்ச்சியே ஆகும்.

அறிவு என்பது அறிந்து வைத்துக் கொள்ளுவது என பொருள்படுகிறது. அறிந்து கொள்ளுவதாகிய இந்த அறிவு, ஞானம் என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. இந்த அறிவாகிய ஞானம், இரண்டு வகையாக சான்றோர்களால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஒன்று விஞ்ஞானம் மற்றது மெய்ஞானம்.

விஞ்ஞானம் = விக்ன+ஞானம் என பிரிக்கலாம். ’விக்ன’ என்றால் “உடைந்த”, “சிதைந்த” என்று பொருள். விஞ்ஞானம் என்றால் உடைத்து பார்க்கின்ற அறிவு, சிதைத்து பார்க்கின்ற அறிவு என பொருள். இந்த விஞ்ஞானம் விஞ்ஞானிகளால் மூன்று வகையாக் பகுக்கப்படுகிறது. அவை பௌதீகம், ரசாயனம், உயிரியல் என்பனவாகும்.

பொருட்களை உடைத்தும், பகுத்தும், சிதைத்தும் செய்து பார்க்கின்ற அறிவு பௌதீக இயலைப்பற்றிய அறிவு.

பொருட்களை உடைத்தும், சிதைத்தும், எரித்தும், காய்ச்சியும், ஆவியாக்கியும், ஒன்றை இன்னொன்றோடு கலந்தும் ஆய்வு செய்து பார்க்கின்ற அறிவு ரசாயன இயலைப்பற்றிய அறிவு.

உயிரினங்களின் உடம்புகளின் இயக்க நுட்பங்களைக் கூர்ந்து கவனித்தும், அறுத்து கவனித்தும் அவற்றின் இயக்க பேதங்களின்பால் இருப்பதாகிய இயற்கை நுட்பங்களை அறிந்து தெளிதல் உயிரியல் பற்றிய அறிவாகும்.

“மெய்” என்றால் உடம்பு, உண்மை என்று பொருள். மெய்ஞானம் என்றால் உடம்பைப்பற்றிய அறிவு என்பது நேர்பொருள். இதுவல்லாது மெய் என்ற சொல்லுக்கு “உண்மை” என்று பொருள் கொண்டு, உண்மையான் அறிவு என்று பொருள் கொள்ளலாம்.

--- தொடரும்
அடுத்த பகுதி

9 comments:

  1. ஆஹா.. என்ன ஒரு விளக்கம்.. விஞ்ஞானம் என்பதை இப்படியும் பிரித்து பொருள் அறியலாமோ... சூப்பர்...

    ReplyDelete
  2. //விஞ்ஞானம் = விக்ன+ஞானம் என பிரிக்கலாம். ’விக்ன’ என்றால் “உடைந்த”, “சிதைந்த” என்று பொருள். விஞ்ஞானம் என்றால் உடைத்து பார்க்கின்ற அறிவு, சிதைத்து பார்க்கின்ற அறிவு என பொருள். இந்த விஞ்ஞானம் விஞ்ஞானிகளால் மூன்று வகையாக் பகுக்கப்படுகிறது. அவை பௌதீகம், ரசாயனம், உயிரியல் என்பனவாகும்.// பொருள் விளக்கம் சூப்பர்ர்!!

    ReplyDelete
  3. இலா ---தொடரும்...

    ReplyDelete
  4. அன்பு சகோதரி மேனகா நல்வரவு. கருத்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. ஆ... மெஞ்ஞானம், விஞ்ஞானம்... என்ன ஒரு அருமையான விளக்கம். இதைவிட நுணுக்கமாக யாராலும் விளக்க முடியாது.... தொடருங்கோ ஹைஷ் அண்ணன், தொடருங்கோ.., பழையபடி, உங்கள் பதிவுகளைப் பார்க்க எனக்கு, மெய் + சிலிர்க்கிறது... சந்தோஷத்தில்....

    ReplyDelete
  6. அன்பு தங்கை அதிராவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. அடடா விஞ்ஞானத்துக்கு இவ்ளோ அழகான விளக்கமா??? எனக்கே ரொம்ப தெளிவா புடிஞ்சுருச்சு. நன்றி ஹைஸ் அண்ணா அழகான பதிவிற்க்கு... பகிர்தலுக்கு மீண்டும் நன்றி அண்ணா.....

    ReplyDelete
  8. அன்பு சகோதரி லதாவீனித் தங்களின் நல்வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. நன்று

    ReplyDelete