Friday, May 7, 2010
என் அன்னை அனுப்பிய தேவதை
என் 21 வயதில் என் அன்னை இறுதி சடங்குகளுக்காக பெங்களுரில் இருந்து கடலூருக்கு பேருந்து ஏதும் இல்லாததால், ஒரு லாரியில் இடம் பிடித்து வரவேண்டிய நிலை காலை சுமார் 3:30 மணியளவில் 80 அல்லது 90 கி,மீ வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்த அந்த லாரியின் இடது முன் சக்கரம் வெடித்து விபத்துக்குள்ளாகியது.
அதில் பயணம் செய்த லாரி ஓட்டுனர்(1), நடத்துனர்(2), அதில் இருந்த சரக்குகளின் (Concentrated Sulphuric Acid) உரிமையாளரின் மகன்(16 வயது)(3), ஒரு வயதான முதியவர் (பயணி)(4) மற்றும் நான்(5) அந்த விபத்தில் பயணம் செய்த ஐவரில் நான்கு பேர் அங்கேயே இறந்து விட்டனர், நான் மட்டும் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் தப்பி வந்தேன்.
யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள், ஆனால் யாரோ ஒருவர் என்னை காப்பாற்றி இருக்கிறார் என மட்டும் உள்ளுணர்வுகள் சொல்லிக் கொண்டே இருக்கும். அதே போல் பல தடவைகள் பல சிக்கல்களில் இருந்து என்னை அறியாமலே காப்பாற்ற பட்டு இருக்கிறேன்.
போன மாதம் “சூட்சம உலக தற்காப்பு கலை” கற்றுக் கொள்ளும் போதுதான் அந்த என் கேள்விக்கு விடை கிடைத்தது.
ஒரு தாய் தன் குழந்தையை பற்றி நினைக்கும் போது அவளின் மனதில் உருவாகும் எண்ணம் ஒரு மின்காந்த அலையதிர்வு(Thought Energy). அதையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தால் அதற்கு ஒரு வடிவம் கிடைக்கும் (Thought Form), அதை இன்னும் ஆழ்ந்து மனப்பூர்வமாக சிந்திக்கும் போது அதற்கு உயிர் கிடைக்கும் (Thought Entity) அதன் பிறகு அதுவே பலம் பெற்று அந்த குழந்தையை பாதுக்காக்கும் தேவதையாக மாறுகிறது(The Guardian Angle for the child).
இவையனைத்தும் சூட்சம உலகில் நடக்க கூடியது. இந்த தேவதை அந்த தாய் இறக்கும் போது அவளுடனே மறைந்து விடாது. அந்த குழந்தை இறக்கும் போது அதற்கு வேலையில்லாமல் போகும் போதுதான் மறையும். அதுவரை நம் தாய் தந்தை உயிருடன் இல்லை என்றாலும் அவர்கள் நமக்காக விட்டு சென்ற பாதுகாப்பு தேவதை நாம் உயிருடன் இருக்கும் வரை துணையிருக்கும்.
1. தாய் தந்தையை மதிக்காதவர் சிறந்து வாழ்ததாக சரித்திரம் இல்லை.
2. தெய்வம், குரு, தந்தைக்கு முன் தாய்தான் சிறந்தவள்.
3. உலகின் அதி சக்தி வாய்ந்த மந்திரம் “ஒம் மாத்ரு தெய்வோ பவ! பித்ரு தெய்வோ பவ நம!” இதன் பொருள் ஓம் எனும் பிரணவ சக்தியே அன்னை எனும் தெய்வத்தையும், தந்தை எனும் தெய்வத்தையும் வணங்குகிறேன்.
இந்த மந்திரத்தை சொல்பவருக்கு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த தீய சக்தியும் அண்டாது எனபது உறுதி.
அதே போல் எந்த ஒரு பெண்ணுக்கு “அனாதகம்-Heart Center” சக்கரம் சரியாக மலரவில்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது. அதற்கு பரிகாரம் “அனாதகம்” திறக்க “இரட்டை இதய தியானம்” மிக சிறந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
ஹைஷ் அண்ணன், இதைப்படித்ததும் எனக்கு மனதில் கேள்விகள் வந்தது, ஆனால் கேள்விகள் இதில் கேட்கப்படாது என நீங்கள் அறிவித்துள்ளமையால் கேட்காமல் போகிறேன்.
ReplyDeleteமிக அருமையான மந்திரம்.
சில விஷயங்களில் மாற்று கருத்து இருக்கு.இருந்தாலும் பெற்றோர்க்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது மனித செயலே இல்லை.
ReplyDeleteஉங்களுக்கு சொந்த ஊர் கடலூரா ?
நல்ல பதிவு அண்ணா.இப்பதிவைப் படித்ததும் என் அம்மாவின் நினைவில் நான் அழுதே விட்டேன்.பெற்றோர்கள் இறைவனடி சேர்ந்தாலும் என் கூடவே வாழ்கிறார்கள்.அனுபவத்திலும் காண்கிறேன்.
ReplyDeleteநல்லதொரு மந்திரம் கூறியமைக்கு மிக்க நன்றி அண்ணா.
நான் இதை நம்புகிறேன். போன வாரம் சின்னப்பெண் ஊருக்கு போகும் போது நினைத்தேன். அங்காங்கே விபத்துகள் நடக்குதே. வாராவாரம் வரும் பத்திரமாக வந்து சேர வேண்டும் கடவுளே என்று.
ReplyDeleteஇந்த வாரம் வரும் போது நடந்த விபத்தில் நல்லவேளையாக் லேசான அடியுடன் தப்பியதே பெரிய விஷயம்.
நீங்கள் சொல்லும் காரணம் தான் அதற்கு காரணமோ? மன்னிக்கவும். கேள்வியாக இல்லை. பதிவாக சொல்லி இருக்கிறேன்.
நானும் இதனை உண்மையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.இன்னமும் எனக்கு உடல் நலமில்லை என்றால் என் தாய் தந்தையர் கனவில் வருவதுண்டு.
ReplyDeleteஅன்பு சகோதர சகோதரிகள் அதிரா, ஜெய்லானி,அம்முலு, செந்தமிழ் செல்வி, ஆசியா உமர் அனைவருக்கும் மிகவும் நன்றி.
ReplyDelete