மானுட வாழ்வின் சுகத்தையோ, துக்கத்தையோ நாம் இந்த மண்ணில் ஜனிக்கும் போதே கொண்டு வந்து விட்டோம். இந்த சுகமோ, துக்கமோ நமது இச்சைப் படி இல்லாமல் எதுவோ ஒரு ஆணைப்படி நமக்கு சம்பவித்துக் கொண்டு இருக்கின்றன என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொண்டு இருக்கின்ற நிஜம். இந்த நிஜத்தைதான் விதி என்று சொல்கிறோம்.
பால பருவத்தில் மனிதன் கற்றுக் கொண்ட ஏட்டுக்கல்வி ஒரு யந்திரத்தனத்தை அவனுக்கு ஊட்டி வைத்தது, பால்ய வயதில் ஆணும், பெண்ணும்; சமத்துவம், சுதந்திரம், நாகரீகம் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு, புலனடக்கம் இல்லாமல், தான் தோன்றிதனமாகப் புலன்களின் நுகர்ச்சிகளிலே விழுந்து; அன்பு, கருணை, தியாகம், தர்மம், மனக்கட்டுபாடு, உடல்நலம் இவற்றை இழந்து வெகு வேகமாக இடைவெளி இல்லாமல் ஓடி களைத்த பின் அவன் அறிந்து கொண்ட முடிவு --- நிம்மதி இன்மை. இனி வாழ்வில் என்ன இருக்கிறது?
முப்பதுக் குள்ளாக ஆடி, நாற்பதுக்குள்ளாக களைத்துப் போன மானுடனின் மனநிலை இந்த கதிக்கு வந்தது.
மனித நிம்மதி என்பது சுற்றுப்புறத்தால், காசு பணத்தால், கல்வியால், பதவியால், தேவைகளின் நிறைவால், ஆட்ட பாட்டங்களால் வருவது அல்ல. அதன் ஆணிவேர் ஆரோக்கியம். அதன் விழுதுகள் அன்பும், நேசித்தலும், நெகிழ்தலும் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஹைஷ் அண்ணன், நல்ல பகிர்வு.கேள்வியும் பதிலும் மிக அழகாகச் சொல்லிவிட்டீங்கள். நிம்மதி என்பது எம் கைகளில்தான் இருக்கிறது. “நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்” என ஒரு பாடலோடு முன்பு ஒரு நாடகம் போனது.... அப்பாடல் வரிகளையே அதிகம் நினைப்பேன்.
ReplyDeleteஇப்பதிவைப் படிப்போருக்கு.... இப்பவே நிம்மதி கிடைத்துவிட்டதுபோல இருக்கும்.
மனித நிம்மதி என்பது சுற்றுப்புறத்தால், காசு பணத்தால், கல்வியால், பதவியால், தேவைகளின் நிறைவால், ஆட்ட பாட்டங்களால் வருவது அல்ல். அதன் ஆணிவேர் ஆரோக்கியமும். அன்பும், நேசித்தலும், நெகிழ்தலும் அதன் விழுதுகள்////
ReplyDeleteஆணித்தரமான உண்மைகள்.
அருமையான பதிவு... நானும் நல்லா ஏசிபோட்ட ரூமில கிடந்து யோசிப்பதுண்டு... எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.. அங்கே எனக்கோர் இடம் வேண்டும்... சில நாள்... "வேறென்ன வேறென்ன வேண்டும்..." என்று இருக்கும்...
ReplyDelete////ஆணிவேர் ஆரோக்கியம். அதன் விழுதுகள் அன்பும், நேசித்தலும், நெகிழ்தலும் ஆகும்.
இதெல்லாம் தமிழ்ல மட்டுமே இப்படி உணர்ந்து எழுத முடியும்... அது படிப்பவருக்கும்.. எழுதுபவருக்கும் நல்ல உணர்வை கொடுக்கிறது...
நல்ல சிந்தனையை தூண்டும் விதமாக முடித்தமைக்கு நன்றி.....
அன்பு அதிரா & இலா நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்