QURAAN MEDICINE – திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் Dr.M.A.HARUN, Phd
திரு ஹக்கீம் எம் ஏ ஹருன் அவரின் திருகுர்ஆன் இயற்கை மருத்துவம் என்ற புத்தகம், பிராண சிகிச்சையை பற்றி 35 ஆவது அத்தியாயத்தில் கூறுகிறது.
///35. துஆ என்னம் பிராண சிகிச்சைகள் உடலில் பிராணசக்தி குறைய காரணம்?
பிராண சக்தியால் உடலுக்கான நன்மைகள், துஆ என்னும் ஆன்மீக பிராண சிகிச்சை, துஆ பிரார்தனை மூலம் குழந்தை பாக்கியம், பிரார்தனைபுரிய சிறந்த இடம் பள்ளிவாசல், கஃபாவில் பிரார்த்தனை. பிரார்தனையில் முழு நம்பிக்கை வேண்டும். தொழுகை மூலம் பூமியிலிருந்து பிராணசக்தி விரலைத்தொட்டு எண்ணுவதில் பிராணசிகிச்சை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைபிடித்த துஆ பிரார்த்தனைகள்///
இந்த புத்தகத்தை பற்றிய சில விமர்சனங்கள்.
திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கை மருத்துவம், கூட்டு மருத்துவம், மாற்றுவழி மருத்துவம் போன்றவற்றில் இருக்கும் அடிப்படை சிகிச்சைகளின் தொகுப்பு இந்த புத்தகம்”தொழுகையில் அக்குபஞ்சர்”போன்ற அத்தியாயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.- இந்தியா டுடே: 29.3.2000
இந்தியா டுடே ஒரு தரமான பத்திரிக்கை, அவர்களின் வாசகம் ”தொழுகையில் அக்கு பஞ்சர்” என எழுதிய நிருபருக்கு அக்கு பஞ்சருக்கும், அக்கு பிரஷருக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
அப்பலோ டாக்டருக்கு அவருடைய காரின் கியர் பாக்ஸை கழற்றி மாட்ட தெரியாமல் இருக்கலாம், அதே போல் ரோல்ஸ்ராய் கம்பெனியின் என்ஜினியருக்கு எப்படி ஊசி போடுவது என தெரியாமல் இருப்பது தவறு அல்ல. இங்கு தேவையானது திறந்த மனமும், அடுத்தவரின் திறமையில் நம்பிக்கைதான்.
திருக்குர்ஆன் முஸ்லிம் மதத்தினர் மட்டும் படிப்பதற்கல்ல, அது மனித இனமே படிக்க வேண்டிய நூல் என்று நூல் ஆசிரியர் எடுத்திருக்கும் முயற்சியே, அவரது உழைப்பை அங்கீகரித்து பாராட்டலாம்.- ஹெல்த் ப்யூட்டி – மருத்துவ மாதஇதழ் :ஏப்ரல்,2000
துஆவில் தான் என்னென்ன மருத்துவத் தத்துவங்கள் அமைந்திருக்கின்றன என்பதை படிக்கும் போது டாக்டரின் அபார ஆய்வுத் திறமையை அறியமுடிகிறது. - ஜமா அத்துல் உலமா : நவம்பர் 1999
பி.கு: என் தனிப்பட்ட ஒரு நம்பிக்கை: எந்த ஒரு சிகிச்சையும், மதம் சார்ந்தது அல்ல, அது மனித நேயம் சம்பந்த பட்டது. மனித நேயம் மதங்களுக்கு முற்பட்டது, மேன்மையானது.
மிக நல்ல விளக்கமான பதிவு. நிறையப்பேரின் மனதில் இக்கேள்வி இருந்துகொண்டே இருப்பதை அறிந்திருக்கிறேன். விளக்கமாக உதாரணங்களோடு காட்டிவிட்டீங்கள்.
ReplyDeleteஹீலிங் என்பது, ஒருவித சிகிச்சைதானே. சிகிச்சைக்கு மதம் ஏது???. ஆ..... நானும் மபொர இல பாஷாகிட்டமாதிரியே தெரியுதே....
Please!!!!!! remove the word verification in comments..
நல்ல விளகக்ம் கொடுத்து இருக்கீஙக்
ReplyDeleteநன்றி
விரம் விட்டு எண்ணி , ஓவ்வொரு தெழுகைக்கு க்கு பிறகும் ஓதுவோம் ,
இது கண்கண்ட சிகிச்சை அனுபவமும் எனக்கு./
கொஞ்ச்ம நாள் முன் விரல் நம்நஸுக்கு,
இதை தான் தொடர்ந்து செய்தேன்.
சரியானது.
அன்பு தங்கை அதிரா வருகைக்கு மிகவும் நன்றி. ஓம் மருத்துவத்தில் ஆண் மருத்துவர், பெண் மருத்துவர் என்றோ, ஆண் அல்லது பெண் நோயாளி என்ற பாகுபாடுகள் கிடையாது. அதே போல் மருத்துவர் அல்லது நோயாளி எந்த மதம் அல்லது ஜாதி என்பதும் கிடையாது என தீர்கமாக நம்புபவன்.
ReplyDeleteபி.கு: எஸ் 35/100
அன்பு சகோதரி ஜலீலா பானு, ஆம் அவரவர் வழக்கம் அல்லது நம்பிக்கை படி செய்வது 80% குணமளிக்கும், மற்றவை எல்லம் 20% தான்.
ReplyDelete